" சாப்பிட்டு விட்டீர்களா? "
கையில் மருந்துடன் வெள்ளுடையின் கேள்வி
சாதாரண கேட்டலில் கண்ணில் நீர் .
ஆம்... இந்தமுறை வேதாவின் சரிதைதான்..
காவேரி ஆற்றங்கரையில்
கடவுளுக்கு வாழ்க்கைபட்ட பூமியில்
அவளுக்கு மட்டுமான வீடு
சொல்லப்போனால் ,
குறை ஒன்றுமில்லை அவளுக்கு
வளத்திலும் நலத்திலும்
வேண்டாதது தவிர்த்து
வேண்டிய அத்தனையும் உண்டு
வெளிநாட்டு வேலையில்
வேதாவின் மகன் அருளியது.
அருளுவதுகூட கடமைதான்
பின் ஏன் கண்ணீராம் .....?
மகன் கேட்க வேண்டிய கேள்வி
என்னவோ தெரியவில்லை
அதை மட்டும் கேட்பதில்லை
வழமையான விசாரிப்பு இல்லாமல்
என்ன பேச்சு அது ....!
நேற்றுகூட அவன் பேசினான்
பேசியதை பெட்டி செய்தியில் காண்க
மற்றபடி வேதாவின் விருப்பம்
அன்றும் நிரலில் இல்லை
தொலை பேசியின் குரல்
நேயர் விருப்பம் இல்லாத
வானொலி நிகழ்ச்சி போலானது ..
அப்புறம் என்னவாயிற்று ?
ஒருநாள் குட்டி பேரன் கேட்டான்
' பாத்தி மம்மம் சாப்ட்டியா?'
தொலைபேசி புண்ணியம்தான்
வேதா அதன் பிறகு பேசவேயில்லை!
பதிமூனாம் நாள் முடித்தபின்
கவலையாய் மகன் கேட்டான்
' அங்கெல்லாம் காக்கா இல்லை
அம்மா எப்படி சாப்பிடுவாங்க ?'
சில சமயம் நாம் சாதாரணமாக நினைப்பதுகூட அசாதாரணமான விஷயம் ஆகிவிடுகிறது . சொல்லியது மட்டுமல்ல சொல்லப்படாத வார்த்தைகள் கூட மதிப்பானவையாவது காதலில் மட்டுமல்ல கடைசி காலத்திலும்தான்.
கையில் மருந்துடன் வெள்ளுடையின் கேள்வி
சாதாரண கேட்டலில் கண்ணில் நீர் .
ஆம்... இந்தமுறை வேதாவின் சரிதைதான்..
காவேரி ஆற்றங்கரையில்
கடவுளுக்கு வாழ்க்கைபட்ட பூமியில்
அவளுக்கு மட்டுமான வீடு
சொல்லப்போனால் ,
குறை ஒன்றுமில்லை அவளுக்கு
வளத்திலும் நலத்திலும்
வேண்டாதது தவிர்த்து
வேண்டிய அத்தனையும் உண்டு
வெளிநாட்டு வேலையில்
வேதாவின் மகன் அருளியது.
அருளுவதுகூட கடமைதான்
பின் ஏன் கண்ணீராம் .....?
மகன் கேட்க வேண்டிய கேள்வி
என்னவோ தெரியவில்லை
அதை மட்டும் கேட்பதில்லை
வழமையான விசாரிப்பு இல்லாமல்
என்ன பேச்சு அது ....!
நேற்றுகூட அவன் பேசினான்
பேசியதை பெட்டி செய்தியில் காண்க
மற்றபடி வேதாவின் விருப்பம்
அன்றும் நிரலில் இல்லை
தொலை பேசியின் குரல்
நேயர் விருப்பம் இல்லாத
வானொலி நிகழ்ச்சி போலானது ..
அப்புறம் என்னவாயிற்று ?
ஒருநாள் குட்டி பேரன் கேட்டான்
' பாத்தி மம்மம் சாப்ட்டியா?'
தொலைபேசி புண்ணியம்தான்
வேதா அதன் பிறகு பேசவேயில்லை!
பதிமூனாம் நாள் முடித்தபின்
கவலையாய் மகன் கேட்டான்
' அங்கெல்லாம் காக்கா இல்லை
அம்மா எப்படி சாப்பிடுவாங்க ?'
சில சமயம் நாம் சாதாரணமாக நினைப்பதுகூட அசாதாரணமான விஷயம் ஆகிவிடுகிறது . சொல்லியது மட்டுமல்ல சொல்லப்படாத வார்த்தைகள் கூட மதிப்பானவையாவது காதலில் மட்டுமல்ல கடைசி காலத்திலும்தான்.