மகிழம்பூச்சரம்

வாடினாலும் வாசம் மாறாத எண்ணங்களின் வண்ணச்சரங்கள்......

நண்பர்கள்

உயிரை பற்றிய கவலை
தனிமையில் தொக்கி நிற்க
இருட்டு மூலையில்
மனம் மாயசக்தி தேடி
மரணத்தை வென்றிடவே
மன்றாடி வேண்டி நின்றது..
அபயம் கிட்டும் நொடிக்காக
கால்வலிக்க காத்து நின்றது.
இப்படியே போன ஒரு நாளில்
எதுவுமே இல்லாத சூன்யத்தில்
இறுதி நியாயம்  உரைத்தது
'இனி நான் மட்டும்தான்'

எனக்கான என்னுடைய
போராட்டம் ஆரம்பித்திட
உயிர் வாழ்தலின் தத்துவ
ரகசியம் புரிய வருகிறது.
எதுவும் நிலையானதுமில்லை
எதுவும் கிட்டாததும் இல்லை.
ஏனெனில்
ஒன்றை அடித்து
மற்றொன்று உயிர்வாழும்
உயிர் சங்கிலியில் நான்
முதலிடத்திலும் இல்லை
கடைசி இடத்திலும் இல்லை..

16 comments:

எனக்கான என்னுடைய
போராட்டம் ஆரம்பித்திட
உயிர் வாழ்தலின் தத்துவ
ரகசியம் புரிய வருகிறது.///


நல்ல வரிகள்.....

எதுவுமே இல்லாத சூன்யத்தில்
இறுதி நியாயம் உரைத்தது //
உயிர் சங்கிலியில் நான்
முதலிடத்திலும் இல்லை
கடைசி இடத்திலும் இல்லை..//

அருமை அருமை
ஞானம் எனச் சொல்லுதலை விட
"தெளிதல் " எனச் சொல்லலாமா ?
மனம் கவர்ந்த பதிவு
தொடர வாழ்த்துக்கள்
த.ம 1

//ஒன்றை அடித்து
மற்றொன்று உயிர்வாழும்
உயிர் சங்கிலியில் நான்
முதலிடத்திலும் இல்லை
கடைசி இடத்திலும் இல்லை//

ஆமாம்,இதுதான் வாழ்க்கை இதுதான் உலகம்.நல்ல கவிதை.

//உயிர் வாழ்தலின் தத்துவ
ரகசியம் புரிய வருகிறது.
எதுவும் நிலையானதுமில்லை
எதுவும் கிட்டாததும் இல்லை.//

அருமையான வரிகள். vgk

தமிழ்மணம் 4 vgk

ஒன்றை அடித்து
மற்றொன்று உயிர்வாழும்
உயிர் சங்கிலியில் நான்
முதலிடத்திலும் இல்லை
கடைசி இடத்திலும் இல்லை..

ரசிக்க தகுந்த வரிகள் அருமை தோழி

உயிர் சங்கிலியில் நான்
முதலிடத்திலும் இல்லை
கடைசி இடத்திலும் இல்லை../

வாழ்க்கை தாத்பர்யத்தை
விள்க்கும் அருமையான பகிர்வு..

வாழ்வியலின் இயல்பை
படம் போட்டு காட்டி இருக்கிறீர்கள்.
வாழ்வை புரிந்துகொண்ட நிலை
இப்படித்தான் இருக்கும் என்று
தெள்ளத்தெளிவாய் காட்டி நிற்கிறது
கவிதை.

வாழ்க்கையின் வரிகளை அழகாய் கவிதாய் சொல்லியிருக்கீங்க.. மிக அழமான சிந்திக்க கூடிய வரிகள். மிகவும் அருமை

அருமையான கவிதை... வாழ்த்துக்கள்.

நல்ல வரிகள்..த.மணம் 6

குட் ஷேர்

நல்ல கவிதை.இன்றுதான் பார்த்தேன்.ஆச்சர்யம் என்னவென்றால்,இதே தலைப்பில் இன்று நான் ஒரு கவிதை எழுதியுள்ளேன்!

எதார்த்தமான கவிதை.சென்னைப்பித்தனும் இதே தலைப்பில் எழுதவும் தொடர் கவிதைகளோ என நினைத்தேன்.

வாழ்க்கையின் நிலையாமையைப் பற்றி நிறையப் படித்திருந்தும் இந்தக் கவிதை உரைப்பது அதீதம். வார்த்தைகளின் கோர்ப்பு வாழ்க்கைச் சங்கிலியை வாழ்வியல் சிந்தனையோடு பிணைத்து அழகாய் காட்சி தந்து நிதர்சனம் உணர்த்துகிறது. பாராட்டுக்கள் சாகம்பரி.

கடைசிவரிகள் மிகவும் அருமை!நல்ல கவிதையை படித்த திருப்தி வருகிறது!