Popular posts
- இரண்டு விருதுகளும் இதயபூர்வ நன்றிகளும்.
- கருப்பை புற்றுநோய் - கவனியுங்கள் - நேசம் +யுடான்ஸ் இணைந்து வழங்கும் கட்டுரை போட்டி
- பிரச்சினைகளை கையாளுதல்-2
- குழந்தைகளும் ஊட்டச்சத்து பானமும்-1
- நான் ஒரு விண்மீன் குஞ்சு
- குழந்தைகள் உலகம் மகத்தானது -தொடர் பதிவு
- அவளோடும் ஆகும்; அவள் பிரிந்து போம் போது....
- முதியோர் மன நலம் காப்பது அவசியமா?
Labels
- . வலைப்பூவின் அழைப்பு (1)
- அம்மா (12)
- அனுபவம் (1)
- இனிய இல்லம் - கட்டுரை (28)
- கடிதம் (7)
- கட்டுரை (10)
- கவிதை (55)
- சிறுகதை (2)
- பதிவுலகம் (3)
- பிள்ளைகள் வளர்ப்பு (8)
- மனவள கட்டுரை (24)
- முதியோர் (23)
- முதியோர் நல கட்டுரைகள் (7)
- முதியோர் நல சட்டம் (1)
- வாழ்வியல் கவிதைகள் (15)
வாசிப்பகம்
-
-
தித்திக்குதே (1)6 days ago
-
-
இந்த மாடுகளை காப்பாத்த யாருமே இல்லையா...2 months ago
-
குளோபல் வில்லேஜ்-2023-2024!!!4 months ago
-
-
-
சீனி கிழங்கு...5 years ago
-
-
கோலி சோடா 2 அசத்தலான ட்ரைலர் வெளியீடு.7 years ago
-
Service Tax என்ற பெயரில் பகல் கொள்ளை...8 years ago
-
-
தலையுடன் தலைநகரில் :8 years ago
-
பயணங்கள் முடிவதில்லை9 years ago
-
தென்னாப்பிரிக்க அணியின் இறங்கு முகம்9 years ago
-
குதுகல ஆங்கில புத்தாண்டு வாழ்த்துகள்-20169 years ago
-
-
நாலு பேர் நாலுவிதமா பேசுவாங்க - இரண்டு10 years ago
-
கவிழாய் செம்பிழம்பே!!!10 years ago
-
உலக சமையல் 1 ~ பயையா...11 years ago
-
ஏனோ உறக்கமில்லை எனக்கு...12 years ago
-
Social Icons
About Me

- சாகம்பரி
- என் எழுத்துக்கள் - இனிமையான, கலாச்சாரம் சார்ந்த இல்லறங்கள் கொண்ட, சிந்தையில் ஆயிரம் எண்ணங்களுடய சங்ககால தமிழ் உலகம் - இதனை மறுபடி உயிர்ப்பிக்க வேண்டி சமர்ப்பிக்கப்படுகின்றன.
Powered by Blogger.
Featured Posts
நண்பர்கள்
Posted by
சாகம்பரி
Saturday, October 29, 2011
உயிரை பற்றிய கவலை
தனிமையில் தொக்கி நிற்க
இருட்டு மூலையில்
மனம் மாயசக்தி தேடி
மரணத்தை வென்றிடவே
மன்றாடி வேண்டி நின்றது..
அபயம் கிட்டும் நொடிக்காக
கால்வலிக்க காத்து நின்றது.
இப்படியே போன ஒரு நாளில்
எதுவுமே இல்லாத சூன்யத்தில்
இறுதி நியாயம் உரைத்தது
'இனி நான் மட்டும்தான்'
எனக்கான என்னுடைய
போராட்டம் ஆரம்பித்திட
உயிர் வாழ்தலின் தத்துவ
ரகசியம் புரிய வருகிறது.
எதுவும் நிலையானதுமில்லை
எதுவும் கிட்டாததும் இல்லை.
ஏனெனில்
ஒன்றை அடித்து
மற்றொன்று உயிர்வாழும்
உயிர் சங்கிலியில் நான்
முதலிடத்திலும் இல்லை
கடைசி இடத்திலும் இல்லை..
தனிமையில் தொக்கி நிற்க
இருட்டு மூலையில்
மனம் மாயசக்தி தேடி
மரணத்தை வென்றிடவே
மன்றாடி வேண்டி நின்றது..
அபயம் கிட்டும் நொடிக்காக
கால்வலிக்க காத்து நின்றது.
இப்படியே போன ஒரு நாளில்
எதுவுமே இல்லாத சூன்யத்தில்
இறுதி நியாயம் உரைத்தது
'இனி நான் மட்டும்தான்'
எனக்கான என்னுடைய
போராட்டம் ஆரம்பித்திட
உயிர் வாழ்தலின் தத்துவ
ரகசியம் புரிய வருகிறது.
எதுவும் நிலையானதுமில்லை
எதுவும் கிட்டாததும் இல்லை.
ஏனெனில்
ஒன்றை அடித்து
மற்றொன்று உயிர்வாழும்
உயிர் சங்கிலியில் நான்
முதலிடத்திலும் இல்லை
கடைசி இடத்திலும் இல்லை..
Labels:
கவிதை
Posted by
சாகம்பரி
Saturday, October 15, 2011
வெற்றியோ....! தோல்வியோ.....!
ஏனோ சில சிறிய பயணங்களை
உலகம் கவனப்படுத்துவதில்லை!
மழைவிட்ட பகல் வேளையில்
சாலையை கடக்க யத்தனிக்கும்
இரயில் பூச்சியின் முயற்சியாக
வாழ்க்கையின் மறுபக்கம் தேடிட
ஊர்தலின் வேதனை தொடங்கியது.
விதவிதமான சக்கரங்கள் உருள
உராய்வின் சூடு பரவி பதிந்த
பாதையில் பயணம் ஆரம்பித்தது.
அது மறுபக்கம் சேர்ந்திடலாம்...
ஆற்றங்கரையோர நாகரிகமாக
புதிய வாழ்விடம் சேரலாம்..!
அல்லது
ஒரு அசூசையான பொருளாக
சக்கரத்தில் ஓட்டி கொண்டு
வாழ்நாளின் பாதியிலேயே
முற்றும் போட நேரிடலாம்!
மற்றொரு மழை நாளிலோ,
வாகனத்தை கழுவும்போதோ,
எஞ்சிய பாகங்கள் கிட்டலாம்
அல்லது
மறுபக்கம் சென்று சேர்ந்ததும்
யார் பார்வையிலும் படாமல்
பூமியினுள் புதைந்திருக்கலாம்.
எதுவானாலும்....
தேடலின் நிமித்தங்கள்தான்
வாழும் உலகின் எல்லையை
மாற்றி அமைக்கின்றன.
Labels:
கவிதை
Posted by
சாகம்பரி
Tuesday, October 4, 2011
காற்றுக்கும் காற்றுக்கும்
வெள்ளி சுவரெழுப்பியே
இறகு பந்தாகி துள்ளிட,
சூரியனின் தூரிகையில்
ஏழு வர்ணம் கொண்டு
பளபளத்து பறக்கிறேன்.
இலக்கின்றி செல்கையில்
மிதத்தலின் சுகம் புரிகிறது
நான் செல்லும் பாதை
தெளிவாக இருக்கும்வரை
வழியில் சிறு குண்டூசியின்
தலையீடுகூட இல்லாதவரை
சம பலம் பலவீனத்துடன்
மற்றொரு குமிழ் வந்து
என் மீது மோதாதவரை
வெடித்து சிதறிப்போகாமல்
பத்திரமாக மிதக்கலாம்.
குறுஞ்சிரிப்பில் மலரும்
பார்வைகளில் ஊக்கமுற்று
பின்விளைவின் பயமின்றி
காற்றொடு கை கோர்த்து
வருவது வரட்டும் என்று
சித்தாந்த சிந்தனையுடன்,
பரந்து விரிந்த உலகின்
அடிப்படை அன்பு தேடி
கள்ளமின்றி மிதக்கிறேன்
ஏனெனில் என்னுள் இருப்பது
ஒரு குழந்தையின் மூச்சு !
வெள்ளி சுவரெழுப்பியே
இறகு பந்தாகி துள்ளிட,
சூரியனின் தூரிகையில்
ஏழு வர்ணம் கொண்டு
பளபளத்து பறக்கிறேன்.
இலக்கின்றி செல்கையில்
மிதத்தலின் சுகம் புரிகிறது
நான் செல்லும் பாதை
தெளிவாக இருக்கும்வரை
வழியில் சிறு குண்டூசியின்
தலையீடுகூட இல்லாதவரை
சம பலம் பலவீனத்துடன்
மற்றொரு குமிழ் வந்து
என் மீது மோதாதவரை
வெடித்து சிதறிப்போகாமல்
பத்திரமாக மிதக்கலாம்.
குறுஞ்சிரிப்பில் மலரும்
பார்வைகளில் ஊக்கமுற்று
பின்விளைவின் பயமின்றி
காற்றொடு கை கோர்த்து
வருவது வரட்டும் என்று
சித்தாந்த சிந்தனையுடன்,
பரந்து விரிந்த உலகின்
அடிப்படை அன்பு தேடி
கள்ளமின்றி மிதக்கிறேன்
ஏனெனில் என்னுள் இருப்பது
ஒரு குழந்தையின் மூச்சு !
Labels:
கவிதை
Subscribe to:
Posts (Atom)