மகிழம்பூச்சரம்

வாடினாலும் வாசம் மாறாத எண்ணங்களின் வண்ணச்சரங்கள்......

நண்பர்கள்

மலையேற்றம்
குளிரையும் தாண்டிய
வெப்ப வீச்சில்
பாதங்களின் பரிதவிப்பு
பாதையின் கடினம்
பாறைகள் விதித்த
எல்லையை தாண்ட
மரமே பாலமாய்

ஆனால்....
மரத்திற்கென்ன
காதல் தோல்வியா ?
பாறை பாறையாகவே
பாராமல் இருந்ததால்
பார்த்து பார்த்து
மனம் வெறுத்து
இலை துறந்து
உயிர் விடுத்து
தொடுதலில் வெற்றியா?

இங்கும் பலருக்கு
பல கதைகள் கிட்டுகிறதே
உண்மையில்
இது தாஜ்மகால்தான்8 comments:

வித்தியாசமான சிந்தனை, கவிதையும் கூட..

நன்றி திரு.கருன். வித்தியாசமான புகைப்படம் தந்த சிந்தனை.

//இங்கும் பலருக்கு
பல கதைகள் கிட்டுகிறதே
உண்மையில்
இது தாஜ்மகால்தான்//

சூப்பரா இருக்கு படமும் கவிதை...

காட்சிக் கவிதை அருமை.

மிக்க நன்றி திரு.நாஞ்சில்.மனோ.

கருத்துரையிட்டதற்கு மிக்க நன்றி திரு. ராஜராஜன்.

வித்யாசமான கரு

மிக்க நன்றி திரு.எல்.கே