மகிழம்பூச்சரம்

வாடினாலும் வாசம் மாறாத எண்ணங்களின் வண்ணச்சரங்கள்......

நண்பர்கள்

வரிசையாய் பொம்மைகள்
     சில மனித வடிவில்
சில மிருக வடிவில்
     எது மாதிரியும்
இல்லாததும் உண்டு
     கடையிலிருந்து
வீட்டிற்கு வந்தன
     சில வீதிக்கும் சென்றன


சேரிடம் வந்ததும்
       வந்த வழி மறந்தன
தன் பாதையில்
       தானாக நடந்தன
- அப்படி நினைத்தன
       ஆடின பாடின ஓடின
விழுந்தன எழுந்தன
      அடுத்ததற்கு எதையும்
கற்றுத் தரவுமில்லை
      கற்றுக் கொள்ளவுமில்லை
தலை சிறந்த பொம்மையாக
     தன்னை நினைத்தன


என்றோ ஒரு நாள்
      வீட்டிற்கு வந்ததும்
வீதிக்கு வந்ததும்
     ஒரிடத்தில் சந்தித்தன
உடைந்தும் அழுக்காகவும்
    சிரிப்பை மறந்து போயும்
ஆனாலும்.....
     அடையாளம் கண்டன
என்னதான் செய்தோம்
      என்று கேட்டுக்கொண்டன
காட்சிகள் ஒளிப்படமாய்
     வெற்று வெளியில் ஓடின
தோற்று துவண்ட
      காட்சியில் சிரித்தும்
வெற்றி எக்காளமிட்ட
     காட்சியில் அழுதும் என
உணர்வின் பிரதிபலிப்பு
     மாறித்தான் போயிற்று


ஏனெனில்.....
தோற்றபோது தேற்றிய
     சத்திய ஜோதியானது
எக்காளமிட்டபோது   

    அணைந்து விட்டதும்
 அவைகள் தனித்து
     விடப்பட்டதும் தெரிந்தது.
அடுத்த தோல்விக்கு
     காரணமும் புரிந்தது


மீண்டும் விற்பனைக்கு
     புதிதாக மாறி காத்திருந்தன
இந்த முறை அத்தனைக்கும்
     அர்த்தம் புரிந்து விட்டிருந்தது

6 comments:

ஆகா. அருமையான கவிதை...

அடடா... நல்ல உருவகம். அருமை.

gud

கருத்துரையிட்ட விதம் நன்றி கடனை கூடுதலாக்கி விட்டது. திரு.கருன்

ரசித்து படிக்கப்படும்போதுதான் கவிதை உயிர் பெறுகிறது. மீண்டும் ஒரு முறை நானே படித்துக் கொள்கிறேன். அதற்காக தனி நன்றி திரு.ராஜ ராஜ ராஜன்.

படித்து கருத்துரையிட்டதற்கு நன்றி திரு.எல்.கே