மகிழம்பூச்சரம்

வாடினாலும் வாசம் மாறாத எண்ணங்களின் வண்ணச்சரங்கள்......

நண்பர்கள்

வெகுண்டு வந்தது காளை
எதிர்க்கும் மனிதனோ
புலியின் பாய்ச்சலில்

சிலர் வாலைப்
பிடித்து இழுத்தனர்
- சீறித் திரும்பியது

சிலர் திமிலை
பிடித்துத் தொங்கினர்
உதறித் தள்ளியது

சிலர் துரத்தினர்
கைக்கு சிக்காமல்
துள்ளியோடியது

ஒருவன் மட்டுமே
நேராய் நின்று
கொம்பைப் பிடித்தான்

இருவரும் காலூன்ற
முயற்சித்த நிமிடத்தில்
பார்வைகள் சந்தித்தன

மனிதனின் உறுதியில்
காளைக்கு மனித பயம்
காளையின் கண் சிவப்பில்
மனிதனுக்கோ உயிர் பயம்

உயிரல்லவோ முக்கியம்
தோற்றால் ஏது
அடுத்த சந்தர்ப்பம்?
அந்த நொடியில்
மனிதன் காலூன்ற
மிருகம் பணிந்தது

முடிவை நோக்கி
தள்ளும் பிரச்சினையோ
முடிவில்லா இன்னலோ
 
நிமிர்ந்து நின்றால்
கடைசி சந்தர்ப்பத்திலாவது
வெற்றி உறுதிபடும்



8 comments:

"வீர விளையாட்டு" என்று மார் தட்டிக் கொள்ளும் 'ஜல்லிக்கட்டில்', வீரம் என்பதம் மூலம் 'பயம்' தான்-- மிக மிக அழகான பார்வை... Hierarchy of the momentum the poetry built, helped me enjoy the essence of it, better...

brilliant!

பயம்தான் பலம் Matangi Mawley. (மாதங்கி மௌளி? சரியா) கருத்துரைக்கு நன்றி.

//மனிதன் காலூன்ற
மிருகம் பணிந்தது//

இதை இன்னொரு விதமாக கூட
எடுத்துக் கொள்ளலாம் சாகம்பரி(இவ்வாறு அழைக்கலாமா?)

மனிதன் தன் மனக் காலையும் உறுதியாக ஊன்றினால்
அவன் மனதில் குடி கொண்ட மிருகம் கூட பணியும்(அடங்கும்)
அல்லவா?

அப்படியும் கொள்ளலாம். உண்மையில் கவிதை என்பது ஒவ்வொருவருக்கும் பல அர்த்தங்களை தரக்கூடியது. நீங்கள் இன்னுமொரு கோணத்தில் பார்த்துள்ளீர்கள். நன்றி ராஜி.

இங்கு காளையை குறியீடாய் பார்த்தால் ராஜி சொல்வது சரியாக இருக்கும்.

@லாஜி
குறியீடா பார்த்தா நீங்க சொல்றது சரி .

காளை குறியீடு - ஆன்மீகம் , லௌகீகம் இரண்டுக்கும் அர்த்தம் உண்டு. எதையுமே நேர்மையாக எதிர்கொள்ள வேண்டும். அது மட்டும்தான் என் கருத்து. நன்றி திரு.எல்.கே

தோற்றால் ஏது
அடுத்த சந்தர்ப்பம்?//
Each and every time we think that.

அதுதான் முழு முயற்சி தரும். நன்றி ராஜி