மகிழம்பூச்சரம்

வாடினாலும் வாசம் மாறாத எண்ணங்களின் வண்ணச்சரங்கள்......

நண்பர்கள்

குட்டிக் குட்டியாய்
     மஞ்சள் பூக்கள்....
குழந்தையைபோல்
எட்டி பார்க்கின்றன
அது மலர்ந்து
நேரம் ஆகிவிட்டதால்
இன்னும் சற்று
பொறுத்தால்
வாடிவிடும் என்று
பூசனைக்கு
சேர்த்துக் கொள்ளவோ
தலையில்
சூடிக் கொள்ளவோ
அலங்கார பூச்சாடியில்
வைக்கப்பதற்கோ
யாரையும் தேடவில்லை
"இப்படி ஒரு கோடு
அப்படி ஒரு கோடு
இங்க ஒரு கோடு"
என மழலையில்
ஆங்கில முதல் எழுத்தை
ஓவியமாக
வரையும் ஓவியத்தை
 பரவசமாய் பார்க்கின்றன

7 comments:

கவிதை நல்லா இருக்கு..

தமிழ்மணத்தில் உங்க ஓட்டு போட்டு போணிபன்னுங்க...

மிக்க நன்றி திரு.கருன்

நன்றாக இருக்குங்க

மிக்க நன்றி திரு.எல்.கே

அருமை...

மிக்க நன்றி திரு.ராஜ ராஜ ராஜன்