மகிழம்பூச்சரம்

வாடினாலும் வாசம் மாறாத எண்ணங்களின் வண்ணச்சரங்கள்......

நண்பர்கள்

பொழுதிற்கு முன்
ஊர் சேர வேணும்
பகல் சாயும்போது
தொலைவில் தெரியுது
கல்லால் ஆன தடுப்பு !


 

பயணமோ பாதியில் 
இடையில் வந்த
முற்றுப் புள்ளியோ..!
மனதிற்குள் களைப்பு

இப்படியே நின்றால்
இருட்டில் தவிக்கணும்.
அடுத்த பாதை தேடி
எப்போ நான்......
ஊர் போய் சேருவது...
என்னவோ மலைப்பு !


அருகில் வரவும்
வெள்ளை கோட்டுல
பாதை தெரியுது
அப்போதான் புரியுது
அது முட்டு சுவரல்ல
சாலையின் வளைவு

திருப்பத்தில் வந்ததும்
கண்ணில் தெரியுது
நீண்டு வளைந்த
பாதையின் பளபளப்பு
மெல்ல தொடரும்
என் பயணம்11 comments:

அசத்தலான கவிதை..

அருமையா யாதார்த்த கவிதை..
வாழ்த்துக்கள்...

என் உயிரே பிரிந்துப் போனாலும் உள்ளத்தில் இருக்கும் அவளின் உருவம் மட்டும் அழியாது. ..

விவரங்களுக்கு..

http://tamilpaatu.blogspot.com/2011/03/blog-post_26.html

கருத்துரைக்கு நன்றி திரு.கருன்

கருத்துரைக்கு நன்றி பாட்டு ரசிகன

நல்ல கவிதை வாழ்த்துக்கள்

நன்றி திரு.சண்முகவேல்

//திருப்பத்தில் வந்ததும்
கண்ணில் தெரியுது
நீண்டு வளைந்த
பாதையின் பளபளப்பு
மெல்ல தொடரும்
என் பயணம்//

வலைப்பூவிலும் உங்கள் பயணம் இனிதே தொடர வாழ்த்துக்கள்

கவிதையும் படங்களும் அருமை.

புகைப்பட உதவி அன்னைபூமி பதிவர் ராகவ் - மகன் அன்னைக்கு ஆற்றும் உதவி. பாராட்டுக்களை அங்கேயும் சேர்ப்பித்து விடுகிறேன், நன்றி ராஜேஸ்வரி.

//வலைப்பூவிலும் உங்கள் பயணம் இனிதே தொடர வாழ்த்துக்கள்//

நன்றி ராஜி