மகிழம்பூச்சரம்

வாடினாலும் வாசம் மாறாத எண்ணங்களின் வண்ணச்சரங்கள்......

நண்பர்கள்


சிறு வயதில் பிள்ளைக் கனவு
மதிப்பெண் தேர்வு முடிவுகள்
ஆழ் மனதின் ஆசைகள்

வளரும்போது படிப்புக் கனவு
வெள்ளையுடை , கறுப்பு ஆடை
விதவிதமாய் சீருடையுடன்
சில சமயம் சீருடையில்லாமல்
கலெக்டர் கனவுகள்

வளர்ந்த பின் எதிர்கால கனவு
கட்டுக்கட்டாய் நோட்டுகள்
கை நிறைக்கும் வேலை

பிறகும் கூட கல்யாணக் கனவு
அமைதியாய் அன்பாய்
அழகாய் இனிய இல்லறம்

சற்று பொறுத்து
வயதான காலத்து கனவு
நான் தான் முந்தி என்று

கனவுக்குள் நினைவுகள்
சில சமயம் நினைவே கனவாய்
கண்ணை திறந்தால் புரியும்
கனவுகள் நிஜமானதில்லை

இருந்துவிட்டு போகட்டும்
இனி வரும் கனவெல்லாம்
அடுத்த பிறவி பற்றி

பலித்ததோ இல்லையோ
வாழ்க்கையின் அடுத்த படி
கனவில்லை என்றால்
கண்ணுக்குத் தெரிவதில்லை
8 comments:

வணக்கம் சாகம்பரி... நல்ல கவிதை பகிர்வு.... மதுரை பதிவர்கள் கூட்டம் நடைபெற உள்ளது...மதுரை பதிவர்கள் சேர்ந்து நடத்தும் கூட்டம் இது. மேலும் விபரங்களுக்கு thaiprakash1@gmail.com


எனது வலைபூவில் இன்று: வலைச்சரம் ஆசிரியர் சீனா சிறப்புப் பேட்டி - இரண்டு

அருமையான கவிதை...

கருத்துரைக்கு நன்றி திரு.பிரகாஷ். அழைப்பிற்கும் நன்றி.

கருத்துரைக்கு நன்றி திரு.கருன்

கனவுக்குள் நினைவுகள்
சில சமயம் நினைவே கனவாய்//
நிதர்சனமாய் படம் பிடித்த வரிகள் அருமை.

கனவற்று வாழ நிஜத்தின் நிகழ்வுகளை
கண்டு கலங்காத மனம் வேண்டும்

கருத்துரைக்கு நன்றி ராஜேஸ்வரி.

மனதில் உறுதி வேண்டும் பாரதியின் வேண்டுதல்தான் எத்தனை உண்மையானது ? நன்றி ராஜி