மகிழம்பூச்சரம்

வாடினாலும் வாசம் மாறாத எண்ணங்களின் வண்ணச்சரங்கள்......

நண்பர்கள்


கடுதாசி வந்தது !
இப்படியே போனால் ....
     மாரிக்கு கறி சோறாம்!
இது கெடா வெட்டி வச்ச
      மாரியாத்தா படையல் அல்ல
பட்டினிக்காக கழுவேறிய
       பிச்சையின் ஆத்தாவுக்காக
யாராம் அவள் ?



முட்டுச்சந்து மூலையில்
கட்டில் கடை போட்ட மாரி
எனக்கோ.....
சவ்வு மிட்டாய் கிழவி !
இன்னும் உப்பு மாங்காய்
முந்திரி பழம் வெள்ளரி என
பள்ளி நேரத்து சிற்றுண்டி சாலை
அங்கு மட்டும்....
கடன் அன்பை முறித்ததில்லை!
பாசக்கார கிழவி ...

படித்தவுடன் வலியை உணர்ந்தேன்
இதயம் மூளை மரத்துப்போன
வாழ்வியல் போராட்டத்தில்
தோற்றுப்போனது மானுடம்


திங்களன்று சேதி வந்தது
மாரி கிழவி இறந்தே விட்டாளாம்
கறி சோறு தின்று அல்ல ..
கஞ்சி தண்ணி குடிக்காமல்
கண்மூடி தவமிருந்து
கடைசி மூச்சை விட்டாளாம்

வடக்கிருத்தல் என்றால்
வடக்கு பார்த்துதான் என்றில்லை !



                           என்னை    கேட்டால் கறி சோறு மட்டுமல்ல ஒரு சுடு சொல் கூட அவர்களை வழியனுப்பி வைக்கும் என்று  சொல்லுவேன் .


2 comments:

என்னை கேட்டால் கறி சோறு மட்டுமல்ல ஒரு சுடு சொல் கூட அவர்களை வழியனுப்பி வைக்கும் என்று சொல்லுவேன் .//

hmm

இந்த வலைப்பதிவை ஆரம்பித்த காரணமே இதுதான். முதியவர் நலம் பேணுதல் மானுடத்தின் உயர்வான கொள்கை. இப்போது மறைந்து கொண்டிருக்கிறது. குடும்பம் என்பதன் முக்கியத்துவம் புரிந்தால் - இந்த குறை சரியாகிவிடும். சரிதானே எல்.கே.