மகிழம்பூச்சரம்

வாடினாலும் வாசம் மாறாத எண்ணங்களின் வண்ணச்சரங்கள்......

நண்பர்கள்


         முதல் பகுதியில் சொன்னது போல் நம்மை சம நிலைபடுத்திக் கொள்வது முக்கியம், அதைவிட முக்கியம் அடுத்தவருடன் நம் நிலையை சமன் செய்வது. இல்லையென்றால் - கடலில் விழுந்தவனை தூக்கிவிட கை நீட்டி நாமும் கடலில் விழுந்து விடுவோம். ஏற்கனவே விழுந்தவனும் எழ மாட்டான். அதனால் நாம் உறுதியாக இருந்தால் பிரச்சினையின் ஆரம்பம், முடிவு, அதை சரி செய்வதற்கான வழிமுறைகள் ஆகியவை - நாம் நினைத்தபடி நடக்கவேண்டுமெனில் சூழ்நிலை நம் கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும். 

        " பாம்பென்றால் மிதி பழுதென்றால் தாண்டு " சூழ்நிலையை கையாள கிடைத்த ஒரு சூட்சுமம். எது பாம்பு ? எது பழுது? என்று தெரியாமல் எல்லாவற்றையும் ஒரே மாதிரியாக பார்த்தால் சரி வராது. பேசினால் பிரச்சினை வரும் என்று பயந்தோ " எனக்கு யார் தயவும் தேவையில்லை " என்று நினைத்தோ வெளியாட்களிடம் ஒதுங்கலாம். வீட்டில் உள்ளோரிடம் ஒதுங்கி நின்றால் அது வீடாகவே இருக்காது. எனவே குடும்பத்தாருடன் முரண்பாடுகள் வரும்போது அதனை எதிர் நோக்கி சரி செய்ய வேண்டும். நத்தை தன் கூட்டிற்குள் ஒதுங்குவது போல தன்னக்குள்ளே முடங்கிக் கொள்ளக்கூடாது. 

      கண்டிப்பாக இதற்கு மாற்றுக் கருத்து உண்டு. பொருளாதாரம் , பொருளீட்டல் சம்பந்தமாக பதட்டமும் கவலையுமாக திரியும் உலகில், பிரச்சினையின் ஆணிவேரை அழிக்கும் பொறுமை நமக்கு இருக்காது. ஆனால் நல்ல குடும்பம் அமைய அதை செய்துதான் ஆகவேண்டும். குடும்பத்திற்குள் அன்பிற்கு மட்டும்தான் எல்லையில்லை, மற்ற அனைத்திற்கும் எல்லையுண்டு. பொதுவாக பிரச்சினைகளின் மையம் தவறாக புரிந்து கொள்ளல்தான். இது இரண்டு வகை. ஒன்று ஒரு உறவு புதிதாக உருவாகும்போது நம் எல்லைகளை வரையறுத்து விடுவது நல்லது. கணவன்/மனைவி, மருமகன்/மருமகள் ,அவர்களது குடும்பம், புதிய நண்பர்கள் எல்லாமே இதனுள் அடக்கம். (சில சமயம் நம்மை கலங்க வைக்கும் சம்பவங்கள் நட்பின் மூலமாகவும் நடைபெறும்) இரண்டு ஏற்கனவே நமக்கு பழக்கப்பட்டவர்களிடம் ஏற்படும் மாற்றங்கள் - பிள்ளைகள் பதின் வயதை தொடும் சமயம், அவர்கள் படிப்பிற்காகவோ, வேலைக்காகவோ வேறிடம் செல்லும் போது , மற்றவர்களின் உடல் நலம் பாதிக்கும்போது. நம்முடைய வாழ்க்கை முறைகள் பாதிப்படையும். 

    ஒருவருடனான பிரச்சினையை சரி செய்ய நினைத்து சம்பந்தப்பட்டவரிடம் முயற்சி செய்து தோற்றுப் போன பழைய கதைகளை மறந்துவிட வேண்டும். அப்போது உங்கள் பக்கமும் தவறிருக்கலாம். ஒருவேளை உங்களை உயர்வான ஒரு நிலையில் சித்தரித்து அது போன்ற மனோபாவத்தில் இருந்தால், கண்டிப்பாக நம்முடைய தொனி அதனை காட்டிக்கொடுத்துவிடும் .இன்னும் நிலைமை சிக்கலாகிவிடும். எனவே இது போன்ற நடவடிக்கைகள் ஆரம்பிக்குமுன் நீங்கள் உறுதியான மனதுடன் இருக்க வேண்டும். மேலும் உண்மையான பிரியம் இருக்க வேண்டும். ஆளுமைத்தன்மைகளை விட்டுவிட்டு வெளிப்படையான ஒரு ஆரம்பம் இருக்க வேண்டும்.  
                                                                         
                                           .... தொடர்ச்சி
          உள்ள நிறைவிலோர் கள்ளம் புகுந்திடில்
               உள்ளம் நிறைவோமா? - நன்னெஞ்சே!
         தெள்ளிய தேனிலோர் சிறிது நஞ்சையும்
             சேர்த்தபின் தேனாமோ - நன்னெஞ்சே!

                                                        - மகாகவி பாரதியார்.


யாது வரினும்.. யாது போயினும்.Part-4 

8 comments:

முதல் வணக்கம்..

வணக்கம் திரு.சௌந்தர்.

இதன் அணைத்து பாகங்களும் முடிந்தப் பின் என் கருத்துக்களை சொல்கிறேன்

நன்றி. திரு.எல்.கே.

உள்ள நிறைவிலோர் கள்ளம் புகுந்திடில்
உள்ளம் நிறைவோமா? - நன்னெஞ்சே!
தெள்ளிய தேனிலோர் சிறிது நஞ்சையும்
சேர்த்தபின் தேனாமோ - நன்னெஞ்சே!//
தேனாய் பாய்ந்தது பாரதியின் கருத்துமிக்க வரிகள்.
அருமையான பதிவு.நன்றி.

நன்றி இராஜராஜேஸ்வரி. நம் எண்ணப்போக்கை ஒரு சிறு தவறான எண்ணமும் மாற்றிவிடும் என்பது உண்மைதானே.

உண்மைதான். ஒரு குடம் பாலுக்கு ஒரு துளி மோர் போதுமே. சிறு தவறான எண்ணம் நிச்சயம் அதுவரையிருந்த பிம்பத்தை மாற்றிவிடும் சக்தி படைத்தது தான்.

ஒத்த கருத்திற்கு மிக்க நன்றி இராஜராஜேஸ்வரி