மகிழம்பூச்சரம்

வாடினாலும் வாசம் மாறாத எண்ணங்களின் வண்ணச்சரங்கள்......

நண்பர்கள்

          வழக்கமாக நான் மன வள கட்டுரைகள் இடும்போது யாருக்காக இந்த பதிவு என்பதை தெரிவித்து விடுவேன். சென்ற பதிவில் தெளிவுபடுத்தவில்லை என நினைக்கிறேன். முதலில் ஒரு பிரச்சினையை பார்ப்போம். பொதுவாக கல்லூரி விதிமுறைகளின்படி அலைப்பேசியை மாணவன் பயன்படுத்தக்கூடாது.
 
       ஒரு மாணவனிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்டது. அலைப்பேசியில் அடக்கப்பட்டிருந்த விசயங்கள் வயதிற்கு மீறியவை. நிச்சயம் வழி நடத்தப்பட வேண்டியவன். இது பற்றி ஆலோசனை கூற பெற்றோரை அழைத்தபோது விசயம் புரிந்தது. தந்தை அவனுடன் பேச மாட்டாராம். பேசிப்பல வருடங்கள் ஆகிவிட்டதாம். ஒரே மகன் வேறு. " ஒன்பதாம் வகுப்பு அவன் படிக்கும்போதே அவன் போக்கு பிடிக்கவில்லை. சத்தம் போட்டால் கை மீறிப்போகிறது. நிம்மதி போய்விடுகிறது. எனக்கும் உடல் நிலை சரியில்லாமல் போய்விட்டது. அதனால் அவனுடன் பேசுவதையே நிறுத்தி விட்டேன்" என்றார். மருத்துவரின் ஆலோசனைப்படி யோகா, தியானம் செய்கிறாராம்.
 
           இதே போல வேறு ஒரு விசயத்திற்காக மாணவியின் தாயை அழைத்தபோது அவர் சொன்னதும் இதே கருத்துதான். " இவளுக்கு எத்தனை முறை சொன்னாலும் புரிவதில்லை. எதிர்த்து வேறு பேசுகிறாள். அவள் அப்பாவும் இதை ஆதரிக்கிறார். மன உளைச்சல் தாங்காமல் பக்கத்தில் இருக்கும் மடத்தில் பஜனைக்குப் போய் விடுவேன்." அந்த மடத்தில் அவர் active member ஆகிவிட்டாராம். இவர்கள் பெற்ற பிள்ளைகள் சொல்வது என்னவென்றால் -ன்மீகத்தை ஆயுதமாக   பயன்படுத்துகிறார்களாம்.  அவர்களை அவமானப்படுத்துவதாகவும் தோன்றுகிறதாம். அதனால் அவரவர் விருப்பப்படி இருக்கிறார்களாம் . இது போன்ற பிள்ளைகளிடம் சாம தான பேத தண்டம் எதையாவது முயற்சித்து சரி செய்ய வேண்டாமா?. அதுதான் கடமையும்கூட .
 
             இது போலவே மருகளிடம் கோபித்துக் கொண்டு வீட்டை விட்டு வெளியேறிய மாமனார் "நான் பார்த்துக் கூட்டி வந்தவள். அவளிடம் என்ன சமாதானம் வேண்டியிருக்கு?" என்கிறார். இவரும் தியானம் செய்கிறார்தான். அதுபற்றி ஆலோசனையும் சொல்வார். ரொம்ப நல்ல மனிதர். நிறைவான ஆசிர்வாதங்கள் செய்வார் - வெளியாட்களுக்குத்தான். இன்னும் பல உதாரணங்கள் சொல்லலாம். இவர்கள் அத்தனை பேரும் assertive person என்பதும் உண்மை.

              உண்மையில் மேற்கூறிய பிரச்சினைகளை ஒரு phycologist - மன நல மருத்துவர் (psychiatrist ) அல்ல - சரி செய்து இருக்க முடியும். ஆனால், குடும்பத்திற்குள் நடக்கும் பிரச்சினைகளை சரி செய்வதிலிருந்து தம்மை திசை  திருப்பிக்   கொள்வது , கடமையிலிருந்து       விலகுவது,       விலக்கி       வைப்பது     தவறில்லையா ?    
  உண்மையான    ஆன்மீகம்  இதைச்  சொல்லித்தரவில்லையே. அதைவிடுத்து ஏன் இவ்வாறு நடந்து கொள்கிறார்கள்?. இவர்கள் போலிகளா? அல்லது தன்னைத்தானே ஏமாற்றிக் கொள்கிறார்களா? .

             இதன் பாதிப்புகளை இன்னும் கொஞ்சம் விளக்கமாக பார்க்கலாம். ஒரு குழந்தையின் சிறிய உலகத்தில் நண்பர்கள் இல்லாவிட்டாலும் அப்பா, அம்மா என்ற இருவரின் பங்களிப்பு கண்டிப்பாக இருக்க வேண்டும். மேற்குறிப்பிட்ட உதாரணம் போல இருவரும் ஆளுக்கு ஒரு வடிகாலைத் தேடிக்கொண்டால் எதிர்பாராமல் வரும் பிரச்சினைகளுக்கு தீர்வு தேட ஆளில்லாமல் உயிரை மாய்த்துக் கொள்ளும் முடிவை உடனேயே எடுத்து விடுகின்றனர். அல்லது பிடிவாதக்காரர்களாகவும் முரட்டு குணமுடையோராகவும் மாறி விடுகின்றனர். சம்பந்தப்பட்ட பெரிவர்கள் நினைத்தால் தவிர்த்திருக்கலாமே. பெற்றோரின் ஓற்றுமைதானே பிள்ளைகளின் பலம். என் பதிவின் நோக்கமும் இதுதான்.

         இல்லம் என்பது நான்கு பேர் சேர்ந்து வாழும் இடமல்ல , ஒருவருக்கொருவர் புரிந்து கொண்ட குடும்பம் வாழும் இடம். இதை ஒரு புதினத்தில் படித்துள்ளேன். உண்மைதானே? புரிந்து கொள்ளுதல் என்பது பேசினால்தான் முடியும். ஒவ்வொருவருடைய எல்லையையும் அதுதானே புரியவைக்கிறது. இதை யாராவது சுட்டிக் காட்ட வேண்டாமா? நான் சரி செய்ய முயற்சிக்கிறேன்.
                                                                                                                              தொடரும்....     
                            யாது வரினும்... யாது போயினும் part-3                                        
                                                                                                                                                    

4 comments:

உண்மையான ஆன்மிகம் நமது வாழ்க்கையை ஒட்டியே செல்லும். அதை விளக்கி அல்ல. துரதிர்ஷ்டவசமாக அது தவறாக புரிந்துக் கொள்ளப் பட்டுள்ளது இன்றைக்கு.

அதுதான் பிரச்சினையே. இதை விளக்குவதற்கும் விளங்கிக் கொள்வதற்கும்தான் இந்த பதிவு. நன்றி திரு.எல்.கே

கடமையிலிருந்து விலகுவது, விலக்கி வைப்பது தவறில்லையா ? //
கடமையே முதலில் கவனிக்கப்படவேண்டிய விஷயம்.
கீதையும் கடமையை வலியுறுத்தும் நூல் தானே?

என்னுடைய வழிகாட்டியாக கொள்ளும் நூல்களில் கீதையும் உண்டு. நன்றி இராஜராஜேஸ்வரி..