மகிழம்பூச்சரம்

வாடினாலும் வாசம் மாறாத எண்ணங்களின் வண்ணச்சரங்கள்......

நண்பர்கள்

இது பெற்றவர்களுக்கும் பிள்ளைகளுக்குமானது.
 

         இப்போதிருந்தே ஆரம்பிக்க வேண்டும் அமைதியான அறுபதுகளுக்கு! என்ன அவசரம் என கேட்கவேண்டாம். சமீபத்திய புள்ளிவிவரக்கணக்கின்படி மனிதனின் ஆயுட்காலம்  அதிகரித்துள்ளதாம். முதுமையின் வருகையும் தள்ளிவைக்கப்பட்டுள்ளதாம். 
      
        இருபது ஆண்டுகளுக்கு   முன்பு   வரை   தள்ளாட்டமானது   அறுபது   வயதிலேயே ஆரம்பித்துவிடும். து வரை அனுபவித்திராத வியாதிகள் வந்து சேரும். அதற்கான மருந்துகளும் "ஒண்ட வந்த பிசாசை விரட்டிவிட்டு ஊர் பிசாசை" வரவழைக்கும். சர்க்கரை, இரத்த அழுத்தம் என அடுத்தடுத்த படையெடுப்பில் ஒரே வருடத்தில் எண்பதின் ஆதிக்கம் தெரியும். இப்போது வரமாய் கிடைத்துள்ள கொசுறு வயதுகளுக்கு மருத்துவத் துறையின் புதிய புதிய கண்டுபிடிப்புகள் காரணமாகும். பொதுவாகவே சமூகத்தில் தோன்றியுள்ள உடல் ஆரோக்கியம் பற்றிய விழிப்புணர்வும் இதனை சாதித்துள்ளது.

      எண்ணெய் குறைந்த உணவு, இதய ஆரோக்கியம் , யோகாசனம், எளிய உடற்பயிற்சிகள் உதவியுடன் உடலை தேற்றும் குறிப்புகள். தனியார் வங்கிகள் மட்டுமல்ல தேசிய வங்கிகளும் நாம் முதுமையில் "தலை நிமிர்ந்து" வாழ்வதற்கான காப்பீட்டு திட்டங்களுடன் நம் எதிர்கால பணத்தேவையை பூர்த்தி செய்யக் காத்திருக்கின்றன். அத்துடன் மருத்துவ காப்பீடுகளும் உண்டு. விலை அதிகமானாலும் மூத்தகுடி மக்களின் தேவையை அறிந்து கட்டப்பட்ட முதியோர் இல்லங்கள் (பங்களாக்கள்..?). வியாபார நோக்கமென்றாலும் , இவைகள் இப்போதே எதிர்காலத்தை நம்மை எண்ணிப்பார்த்து செயல்பட வைக்கின்றன.

     ஆனால், எந்தவித லாபமும் தராத காரணத்தால் மிக குறைவான பங்களிப்பை மட்டுமே பெற்றுள்ள ஒரு விசயத்தை நாம் கவனிக்க மறந்துவிட்டோம். குடும்ப உறவுகளுக்கிடையேயான முரண்பாடுகள். நமக்கும் நம் பிள்ளைகளுக்குமான உறவு எப்படி இருக்கவேண்டுமென்றால் , எந்த நேரத்திலும் நம்மை மறுக்க முடியாதபடிக்கு , அவர்களின் நண்பர்கள் பட்டியலில் நம் பெயர்தான் முதலிடத்தில் இருக்க வேண்டும். நாம் பெரி..ரி...யவர்களாக ஆகும்போது சிறியவர்கள் பெரியவர்களாகி இருப்பார்கள். அவர்களோ நம்மை விவரம் அறியாத சிறுபிள்ளைகள் போல பார்ப்பார்கள். 


        அவர்களுடன் நட்பு கொண்டாடும் முகமாக,  மாறிவரும் உலகத்தை புரிந்து கொள்ள நாம் முயற்சித்தாலும் - சிங்கம், சிறுத்தை என பார்ப்பது, ஜஸ்டின் பேபர் பற்றி உரையாடுவது, சமூக பிணையங்களை - ஆர்குட் போன்றவற்றை- பற்றி தெரிந்து கொள்வது - மனதிற்குள் முகம் சுளித்து வெளியே இளித்து என்று நடித்து வைத்தாலும் ஒரு இடைவெளி தோன்றுவதை மறுக்க முடியாது. இது போன்ற நடவடிக்கைகளால் இளையவர்களும் குழம்பிவிடுவார்கள். "அவனுக்காக நானும் எவ்வளவுதான் பொறுத்துப்போவது" என்ற வசனம் அடிக்கடி வந்து போகும். இருவருக்குமிடையேயான எதிர்கால உறவு பற்றி கேள்வி அடிக்கடி எழும்.

       பின் என்னதான் செய்வது என்கிறீர்களா?. நம் மீது அவர்களுக்குள்ள  
நம்பிக்கையை வளர்க்க வேண்டும். எப்படி? . அடுத்த பதிவில் பார்ப்போம். 




                             
                                                 ............. என்றன்
                    நாட்டத்திற் கொண்ட குறிப்பினை இஃதென்று
                                       நான் சொல்லும் முன்னுணர்வான்- அன்பர்
                     கூட்டத்திலேயிந்த கண்ணனைப் போலன்பு
                                    கொண்டவர்   வேறுளரோ ?
                                                           
 - கண்ணன் என் தோழனில் மகாகவி பாரதியார்
குடும்ப உறவில் முரண்பாடுகள் தவிர்ப்பது எப்படி? - பாகம் 2 

7 comments:

உபயோகமான கட்டுரை!

a useful article

ravishna

மிக்க நன்றி திரு.எம்.ஞானசேகரன்

மிக்க நன்றி திரு.ரவி.

நண்பர்களே. உங்கள் புதிய பதிவுகளையும் காலத்தால் அழியாத பழைய பதிவுகளையுத் தமிழ் திரட்டிகளில் புதிய வரவாக வந்துள்ள கூகிள்சிறியில் இணைக்கலாமே? நீங்களாகவே உடனுக்குடன் உங்கள் பதிவின் தலைப்பை மின்னஞ்சலின் Subject பகுதிக்குள்ளும் பதிவின் சுருக்கத்தையும் இணைப்பையும் Body பகுதியிலும் இட்டு rss4sk.googlesri@blogger.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு மின்னஞ்சல் செய்யுங்கள்.உங்கள் பதிவுகள் உடனுக்குடன் சமூக வலைத்தளங்களில் தன்னியக்க முறையில் பிரசுரமாகும்.

நன்றி
யாழ் மஞ்சு

பயன்மிக்க கட்டுரை.

வணக்கம்
இன்று தங்களின் வலைப்பூ வலைச்சரத்தில் அறிமுகமாகியுள்ளது வாழ்த்துக்கள்... பார்வையிட முகவரி இதோ.
http://blogintamil.blogspot.com/2014/09/blog-post_16.html?showComment=1410829864457#c3775928799328011888

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

பயனுள்ள இக்காலத்துக்குத் தேவையான கட்டுரை