மகிழம்பூச்சரம்

வாடினாலும் வாசம் மாறாத எண்ணங்களின் வண்ணச்சரங்கள்......

நண்பர்கள்

சாலை ஓரத்து கையேந்தல்கள்
      நடுங்கும் விரல்களுடன் நீண்டிட...
முகத்தில் வரியோடிய சுருக்கங்களுடன்,
      இன்றைய பாட்டிற்கான தேவையில்....
வறுமை கழுமரத்தில் தொங்கியது
      இத்தனை நாள் வாழ்க்கை கேள்வியாய்..
புதிதாக கற்ற கைத்தொழில்...?
      ஒரே பார்வையில் புரிந்தது
பழகியது கை மட்டும்தான் போலும்
     குன்றலுடன் நின்ற உடலோ பதறியது
யாரோ "தர்ம பிரபு"வின் தயாளத்தில்
     வயிற்றின் அக்னி அயர்ந்திட....  
மனதின் சூன்யத்தின் ஊடுபாகாய்
     ஒளி இழந்த கண்களின் வரிகள்
நாளையாவது நாடகம் முடியுமா?

      ஆபுத்திரன் கை பிச்சை பாத்திரம்
ஆதிரையின் பிச்சையை தேடியது.

10 comments:

nice.,

http://sakthistudycentre.blogspot.com/2011/02/blog-post_26.html

ஓட்டும் போட்டுட்டோம்ல்ல...

சிலிர்க்க வைக்கும் கவிதை
வாழ்த்துக்கள் மற்றும் வாக்குகள்..

கருத்துரையிட்டதற்கு மிக்க நன்றி திரு.கருண்.

கருத்திற்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி திரு.சௌந்தர்.

ஆஹா அருமையான கவிதை

வாழ்த்துக்கள்

கருத்துக்கு மிக்க நன்றி திரு.வேலு

அருமை அருமை...

மிக்க நன்றி திரு.நாஞ்சில் மனோ

கருத்தாழம் உள்ள கவிதை.