மகிழம்பூச்சரம்

வாடினாலும் வாசம் மாறாத எண்ணங்களின் வண்ணச்சரங்கள்......

நண்பர்கள்


ரோஜாக்களின் அணிவகுப்பில்
     மல்லிகையின் தூய்மையில்
செவ்வந்தியின் வண்ணத்தில்
     சற்று ஓரம் தள்ளப்பட்ட
ஒரு சாதாரண சிறிய பூ
    கண்ணை கவரும் அழகில்லை
வெள்ளை, மஞ்சள், பழுப்பு
     எதுவுமே சொல்ல முடியாத
துவைக்க வேண்டிய வண்ணம்
      தரையெங்கும் சிதறிகிடந்தது
அதன் வாசத்தை சுவாசித்து
      நெஞ்சுக்கூடு விரிந்தது
ஒன்றிரண்டை எடுத்து
     பையில் போட்டு வருடமானது
வண்ணம் மாறி, ஈரம் இழந்து
      எப்போது வேண்டுமானாலும்
துகள்களாக மாறி......
     திசை தெரியாமல் பறந்து
உலகின் பார்வையில்
      காணாமல் போகலாம்.
அதன் வாசம் மட்டும்
         இருந்த இடத்தில்
இன்னும் மணக்குது.
 
எப்போதோ மறைந்த தாயின் நினைவு போல
 



6 comments:

அருமையான முடிவு..கவிதையும் அழகு..

மிக்க நன்றி திரு.கருன்

முடிவுதான் இக்கவிதைக்கு பொருள் சேர்க்கிறது

மிக்க நன்றி திரு.எல்.கே.

ரொம்ப அருமையன வரிகள்

மகிழம்பூ வாழ்க்கை. இதைவிடவும் பொருத்தமான உவமை சொல்ல இயலாது.பிரமாதம் சாகம்பரி.

எனக்கு மகிழம்பூ நினைவுறுத்துவது என் அம்மாச்சியை. ஊருக்குப் போகுந்தோறும் எனக்காக இரண்டு கிமீ தூரம் நடந்துசென்று அப்பூக்களைப் பொறுக்கி மடியில் கட்டிவந்து பொறுமையாகக் கோர்த்து என் தலையில் சரம் சரமாகச் சூட்டிவிடுவார். என்றென்றும் மனதோரம் மணம் வீசிக்கொண்டேயிருக்கும் நினைவுகள் அவை.