மகிழம்பூச்சரம்

வாடினாலும் வாசம் மாறாத எண்ணங்களின் வண்ணச்சரங்கள்......

நண்பர்கள்

காற்றில் பறந்தன. ..
பட்டாம்பூச்சியின் சிறகுகள்
உடலை இழந்த
பழைய கதைகளை சொல்லி
இரண்டும் வெவ்வேறு
ஒன்று மழை நாளிலும்
மற்றொன்று வெயிலிலும்
மரித்து போயினவாம்!
பூ இன்றி தேனின்றி
விந்தையாக இல்லை?
வசந்த காலத்தில் மட்டுமே
பறந்து பார்த்து பழகியது
பருவம் தப்பி வருமா?
எப்படி இறந்ததாம்?

கிணற்றுத் தவளையின்
அனுபவ பேச்சைக் கேட்டு
மழைக் காலத்தில்
மஞ்சள் பட்டாம் பூச்சி
மழையில் வண்ணமிழந்த
நனைந்த சிறகினை கொண்டு
பறக்க முடியாது என்றும்
கறுப்பும் சிவப்பும் கொண்டது
வெயிலின் வாட்டத்தில்
பூக்குமா காய்க்குமா
என்ற கவலையிலும்


சுற்றி பூத்திருந்த பூக்களையும்
தளும்பிய நின்ற தேனையும்
பாராமல் அருந்தாமல்
கூட்டுக்குள் இருந்த நினைப்பில்
கண்களை மூடியிருக்க
சுற்றி மொய்த்த எறும்புகள்
சிறகுகளை விட்டு வைக்க
அவை மட்டும் கதை சொல்லின
இன்றைய நிஜத்தில்தான்
வாழும் வித்தை வசப்படுவது
அடுத்தவர் உலகம்
கேட்கவும் பார்க்கவும்தான்


நம்மை சுற்றியிருக்கும் உலகம்தான் நம்மை உயர்த்துகிறது. நாம் சரியாக புரிந்து கொண்டால் பூமியே சொர்க்கம்தான்.

3 comments:

உண்மையான வரிகள்..
கவிதை அருமை.. தொடருங்கள்..
முடிந்தால் நம் வீதிப்பக்கம் வாருங்கள்..

தமிழ்மணத்தில் நான் ஓட்டு போட்டு விட்டேன்.. அதில் உங்கள் ஓட்டையும் பதிவு செய்யுங்கள்..

மிக்க நன்றி திரு.சௌந்தர்.