மகிழம்பூச்சரம்

வாடினாலும் வாசம் மாறாத எண்ணங்களின் வண்ணச்சரங்கள்......

நண்பர்கள்
   
வெயிலில் கால்கள் சுடும்போதும்         
        முகம் வருடும் குளிர் காற்று
வெளிச்சத்தில் நிற்கும்போதும்
          தரையில் தொடரும் என் நிழல்
கண்மூடி உறங்கும் போதும்
         பனி போர்வையாய் நிலவின் பரிவு
வெறுமையில் அண்ணாந்தால்
         விழிகளில் ஆயிரம் விண்மீன்கள்
இலக்கின்றி நடக்கும் போதும்
           என்னைத் தொடரும் காலடித் தடங்கள்.

எனக்குத் தெரியும்  -
    -  கடற்கரை தனிமையில்
    -  என்றும் நான் தனித்ததில்லை!

                                 
 


10 comments:

அருமையான கவிதை..

வாழ்த்துகளும் வாக்குகளும்..

திரு சௌந்தர் அவர்களுக்கு , கருத்துரையிட்டதற்கு நன்றி

கவிதை அருமை...

கருத்துரையிட்டதற்கு மிக்க நன்றி திரு அருண்

உங்க கவிதை வாசிக்கையில்... யாரும் தனித்து இல்லை... கூடவே உங்க கவிதை!

Word verification இதை எடுத்தாதான் கருத்துரைக்க எளிமையா இருக்கும்.

கவிதை சூப்பரா இருக்கு மக்கா....

நன்றி திரு.கருணாகரசு.word verificationஐ எடுத்தாகிவிட்டது.

திரு.நாஞ்சில் மனோ அவர்களுக்கு நன்றி.

nice