மகிழம்பூச்சரம்

வாடினாலும் வாசம் மாறாத எண்ணங்களின் வண்ணச்சரங்கள்......

நண்பர்கள்


        கணவன்-மனைவிக்கு இடையே ஏற்படும் பிரிவினை பற்றி. இன்னும் கொஞ்சம் ஆலோசிக்கலாம் மனதளவில் பெண்கள் இன்றைய சவால்களை சந்திக்கத் தயாராகி விட்டாலும், முந்தைய காலகட்ட பெண்களுடன் ஒப்பிடும்போது உடலளவில் தெம்பு குறைந்துள்ளது. கலோரிகள் கணக்கிட்டு எடை குறைந்த சத்தில்லாத உணவு , தங்கள் வாழ்க்கையை தாங்களே தீர்மானிக்கும் ஆயத்தங்களில் பலவித பதட்டமான சூழ்நிலைகள் , இது போன்ற காரணங்களால் இளம் பெண்கள் நியூட்ரீஷ்னல் அனிமீஷியாவின் பாதிப்பிற்கு உள்ளாகி இருக்கினர். உடல் பருமன் அடைவது, ஹார்மோன் கோளாறுகள், ஹீமோகுளோபின் பற்றாகுறை போன்றவை ஏற்படுகிறது. இதனால் பிள்ளைபேற்றிற்கு பிறகு மிகவும் தளர்ந்து விடுகின்றனர். மனதளவில் கணவனின் ஆதரவை எதிர்பார்க்கும் நேரம். ஆண்கள் தங்களின் வழக்கத்தை மாற்றிக் கொண்டு தேவையான உதவிகளை செய்வது பிறந்த குழந்தையின் வளர்ப்பில் கவனம் செலுத்துவது, எதிர்கால
ம் பற்றி திட்டமிடுவது போன்றவற்றை செய்தால், அவர்களுடைய பங்களிப்பும் ஆமோதிக்கப்படும். இருவருமாக சேர்ந்து திட்டமிடும்போது கடக்கவேண்டிய பாதையை பற்றி தெளிவாக சிந்திக்க முடியும். தங்களை முன்னிறுத்தி செய்யப்பட்ட திட்டங்கள் குழந்தைக்காக மாறும் பொழுது குடும்பம் என்பதின் தேவை தெரியும். மேலும் சுயநலம் குறைந்து அடுத்தவருக்காக சிந்திப்பதும் விட்டுக்கொடுப்பதும் அறிமுகமாகும். விட்டுக் கொடுப்பதின் இனிமையான பின் விளைவுகளையும் புரிந்து கொள்ள முடியும்.

    இப்படியாக இருவரின் தேவை அல்லது தேடுதலின் பொருட்டு தற்காலிகமாக அமைக்கப் படும் உறவானது, குடும்பம் எனப்படும் நிரந்தர அமைப்பாகிறது. சுற்றி இருக்கும் நண்பர், உறவினர்கூட " எப்படியிருக்கிறாய்?" என்று ஒருமையில் கேட்கப்படும் கேள்விகள்கூட "எல்லோரும் நலமா? குழந்தை எப்படியுள்ளது?" என்று கேட்க ஆரம்பிப்பர். இது வழக்கமான விசாரணை மட்டுமல்ல உங்களுடைய பொறுப்புகளை நினைவுறுத்தும் கேள்விகளாக அமைகின்றன. இது போன்று மனதிற்கு தரப்படும் உள்ளிடுதல்கள்தான் நம்மை பொறுப்பானவர்களாகவும், இக்கட்டான சூழ்நிலையில் தொலைநோக்கு பார்வையுடன் அமைந்த முடிவுகளை தெளிவாக எடுக்க வைக்கும். கணவன் மனைவிக்கு இடையே ஏற்படும் பிரிவுகள் , தாலி கட்டுவதற்கு எடுத்துக் கொள்ளப்படும் நேரத்தைவிட குறைவான நிமிடத்தில் முடிவெடுக்கப்படுகின்றன. அதனை செயல்படுத்த ஆகும் நேரம்தான் அதிகம். கண்கள் குளிர்ச்சியான மலையுச்சியில் இருந்தாலும் கால்கள் நடப்பதென்னவோ கரடுமுரடான பாதையில்தான் என்பதை புரிந்து கொள்ளவேண்டும். மணவாழ்க்கை வெற்றியின் ரகசியம் இக்கட்டில் பொறுமை, இன்பத்தில் நிதானம்தான். சிலர் நினைப்பதுபோல நம்முடைய ஒப்புதல் இன்றி யாரும் அடுத்தவர் வாழ்க்கையை கெடுத்துவிடமுடியாது. நெருப்பு வளையத்தை கடக்க பயந்து நெருப்பிற்குள்ளேயே அமர்வது தவறு.

5 comments:

தற்போது இது அவசியமான பதிவு...

See.,

http://sakthistudycentre.blogspot.com/2011/02/blog-post_19.html

கருத்துரையிட்டதற்கு நன்றி

உண்மையில் நல்ல பதிவு..
இன்னும் தொடர்ந்து பழைய பதிவுகளையும் படிக்கிறேன்..

வாக்குகளும் வாழ்த்துகளும்..
கவிதை வீதியும் உங்களை அன்போடு அழைக்கிறது..

ஆறு பதிவுகளையும் படித்தேன். சொல்லவேண்டியவற்றைத் தெளிவாக எவர் மனமும் கோணாமல் எடுத்துரைப்பதில் தாங்கள் வல்லவர் என்பதை அறிவேன். இத்தொடரும் அதையே மெய்ப்பிக்கிறது. படிக்கத் தவறிய மற்றப் பதிவுகளையும் விரைவில் படிப்பேன். வலைச்சர ஆசிரியர் பணிக்கு வாழ்த்துக்கள் சாகம்பரி.