நேற்றைய பதிவில் உடல் ரீதியான பிரச்சினையை சரி செய்யும் விதம் பார்த்தோம், இனி மனப்பதட்டத்தை குறைக்கும் நடைமுறைகள், வீட்டின் முன்னேற்றம், குழந்தைகளின் எதிர்காலத்திட்டம் ஆகியவற்றை உங்கள் மனைவியுடன் ஆலோசியுங்கள். தேவையில்லாத கவலைகள் பறந்து விடும். உங்களுக்கும் புதிய யோசனைகள் கிட்டலாம். பெண்களுக்கே உரிய நாட்களில் , முழு ஓய்வை தாருங்கள்.
வீட்டில் இருக்கும் பெண் என்றால் புதிய வகை கலை பயிற்சிகளை அறிமுகப்படுத்துங்கள் ஓவியம் வரைதல், தையல் வேலை, இசைக் கருவிகள் இசைக்க கற்றுக்கொள்வது. இவை அவர்களுக்குள் புதிய உற்சாகத்தை உருவாக்கும். புத்துணர்வை வெளிப்படுத்துவார்கள். அலுவலகம் செல்பவர் என்றால் விடுமுறை நாட்கள் உற்சாகமளிக்ககூடியதாக திட்டமிடுங்கள். No Samayal Day, fruit night போன்றவற்றை அறிமுகப்படுத்தலாம்.
எந்த பிரச்சினையையும் தீர்க்கக்கூடிய முகமாக ஆரம்பிக்கலாம். சிலர் சாதாரண விசயத்தைகூட திகிலூட்டும் பரபரப்புடன் ஆரம்பிப்பார்கள். அது போன்ற உறவினர்களை எச்சரிக்கை செய்யுங்கள் அல்லது தடுத்து வையுங்கள்.
சாதாரணமாக நாம் பெண்கள் இருப்பதாக உணர்வது , அவர்களுக்கு உடல் நிலை சரியில்லாது போகும்போதுதான். அப்போதுதான் அவர்களுக்கான கவனிப்புகள் கிடைக்கும். அதனாலேயே சில சமயம் உடல் நலமில்லாமல் இருப்பதை விரும்புவார்கள். எதற்கு இவ்வாறு நடக்க விட வேண்டும், இது நம் தவறும் அல்லவா?. இந்த நிலை வராமல் தடுப்பதும் நம் கையில்தான் உள்ளது. இத்தனை கவனிப்பும் ஆண்களுக்கும் ஆண்ட்ரோஜன் குறைய ஆரம்பிக்கும்போது ஏற்படும் - நாற்பதுகளில்தான். ஆனால், ஏதும் சொல்லாமலே இனிய புன்னகையுடன் இதற்கான கவனிப்புகள் ஆரம்பம் ஆகும்.
விழுவதும் அழுவதும் வாழ்க்கை என்றால் தூக்கி விடுவதும் கண்ணீரை துடைத்து விடுவதும்தான் காதல். இது கணவன்-மனைவியிடையே கண்டிப்பாக இருக்க வேண்டும். ஆத்மார்த்தம் என்பதை வாழ்ந்த நாட்கள்தான் சொல்லும்.
மணவிழா உண்மையான வெள்ளிவிழா காண... Part 2