மகிழம்பூச்சரம்

வாடினாலும் வாசம் மாறாத எண்ணங்களின் வண்ணச்சரங்கள்......

நண்பர்கள்

கடினமான காலை நேரம்
சற்றும் காற்று வராத
வெயில் நேரத்துப் பயணம்!
அழுக்காய் கசங்கியதாய்
சுமைகளுடன் கும்பல்!
சுமந்துகொண்டு நகரும்
குப்பையாய் இரயில்!
இடம்பிடிக்க போட்ட சண்டை
அரை மணியாகியும் தீரவில்லை!
எல்லோரும் சிரிப்பை மறந்து
அவரவர் முள் இருக்கையில்.
சன்னலின் வெளியே பார்வை
இலக்கற்ற பறவையாய்.....


இரயில் பாதையின் உறவாய்
இரண்டடி மண் சாலை
விரைவான பயணத்தில்
இரண்டு சக்கர வாகனம்
உலகை மறந்த இருவர்
துப்பட்டா பறக்க முடி பறக்க
புறவழியாதலால் முக்காடிடாத
பின்னிருக்கை பெண் சிரிக்க
(ஆண் சிரித்தது தெரியவில்லை)
............. .............. ...........?
பயணிகள் முகத்திலும்
கொடைக்கானல் குளிர்ச்சி
......... ............ .........!
காதலும் காதலர்களும்
உண்மையோ? பொய்யோ?
ஆனால் ......
நிகழ்கால நெருப்பு சுவடு
பனிப் பிரதேசத்து சூரியன் ஆனது
ஆக, காதலின் தன்மை குளிர்விப்பது.

மற்றவர்களையும்தான்! 

4 comments:

அருமையான கவிதை நண்பா...

http://sakthistudycentre.blogspot.com/2011/02/blog-post_23.html

கவிதை அருமை வாழ்த்துக்கள்..

நன்றி திரு சௌந்தர்

கருத்துரையிட்டதற்கு நன்றி திரு.கரண்