மகிழம்பூச்சரம்

வாடினாலும் வாசம் மாறாத எண்ணங்களின் வண்ணச்சரங்கள்......

நண்பர்கள்

       என்னதான் இனிய இல்லறம் நடத்தினாலும் , சில கட்டத்தில் அது ஆரம்பமும் முடிவும் தெரியாத இடியாப்ப சிக்கலாய் தெரியும். எதனால் இந்த சூழ்நிலை என்று தெரியாமல் குழப்பம் மேலிட சூரிய குடும்பத்திலிருந்து தனியே கழட்டிவிடப்பட்ட கிரகம் போல் அலைவோம். வீடு என்றாலே என்ன இன்னைக்கு காத்திருக்கிறதோ என்ற பயம் ஏற்படும். சொல்லப் போனால் முதல் சுருதி பேதம் ஏற்படுவது இப்போதுதான். இதனை சரி செய்ய முடியுமா?

         உங்கள் மனைவி முப்பதின் பின் பாதியில் இருக்கும்போது இது ஆரம்பித்துவிடும். உடல் நலம் சரியில்லாது , உண்மையில் தளர்ந்துபோய் தெரிவார். சிரிப்பை மறந்த முகம். மருத்துவரிடம் செல்ல அழைத்தால் வர மறுப்பார். தொடர்ந்து வீட்டின் நிலைமை அசாதரணமாக மாறிவிடும். ஏன் இப்படி?

முதலில் அதற்கான காரணங்கள்.

1. முப்பதின் பிற்பாதியில் ஈஸ்ட்ரோஜன் - ஹார்மோன் - குறைவதால் ஏற்படும், குறிப்பிட்டுச் சொல்லமுடியாத உடல் உபாதைகள் ஆரம்பித்து விடும். கால்சியம் குறைபாடு, ஹீமோகுளொபின் குறைபாடு, அனீமியா, சீரண கோளாறு, சத்தின்மை ஆகியன ஏற்படும். எரிச்சலடைவது , படபடப்பு, சட்டென சோர்வடைவது , சில சமயம் நெஞ்சு வலி ஆகியன ஏற்படும்.

2. இத்தனை நாள் குடும்பத்தின் தேவையை மட்டும் நினைத்து செய்த தன்னை மறந்த செயல்பாடுகள் இப்போது குறைந்து விடும். உண்மையில் மனதளவில் மற்றவர்களின் ஆதரவைத் தேடும் நேரம்.

3. குழந்தைகள் வளர்ந்து வாழ்க்கையின் முக்கிய கட்டத்தில் இருப்பார்கள். அந்த கவலை வேறு இருக்கும்.

4. பொதுவாக பெண்கள் மிக அதிகமாக யோசிப்பார்கள், வரக்கூடிய பிரச்சினை பற்றியும் அதை தீர்ப்பது பற்றியும் மனதிற்குள் ஆலோசனை செய்து கொண்டே இருப்பார்கள். இது கூடுதல் பதட்டத்தை ஏற்படுத்தும்.;

5. கணவர் தன் மீது வைத்திருக்கும் அன்பின் மேல் கொஞ்சம் போல சந்தேகமும் வரும்.

இது அத்தனையும் பொதுவாக வரக்கூடிய விசயங்கள். இது புரியாமல் சில ஆண்கள் , மனைவிக்கு நம்மேல் அன்பு குறைந்து விட்டதாக கருதி குமைந்து போவதும். சிலர் தேவையில்லாது புது வசந்தங்களை தேடிப்போவதும் உண்டு. இதனை எப்படி சரி செய்யலாம்?


                                                                                                                               தொடரும்....
   

4 comments:

அருமையான தொடர்பதிவு... வாழ்த்துக்கள்..

http://sakthistudycentre.blogspot.com/2011/02/blog-post_25.html

முதல் கருத்து முக்கிய கருத்தாகும். பதிவை தொடர தெம்பு தரும். நன்றி திரு.கருண்.

இன்னிக்குதான் உங்க பதிவை பார்த்தேன் ..முப்பதின் பின் பாதியில் பெண்களுக்கு ஏற்படும் மாற்றங்களை சொல்லி இருக்கீங்க.

இந்த சமயத்தில் மற்றவர்கள் எப்படி அவர்களை நடத்தணும்னு சொல்லுங்க

கண்டிப்பாக அடுத்தடுத்து தொடரும். நன்றி திரு.எல்.கே